Primary Menu

Top Menu

September 22, 18

தலைதீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்கள் !!

ஒவ்வொரு ஆண்டும் தலைதீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு திருமணம் செய்து கொண்ட நட்சத்திரங்களையும், இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் திருமணம் செய்து கொண்ட நட்சத்திரங்களையும் இங்கு பட்டியலிட்டு இருக்கிறோம்.

தலைதீபாவளி கொண்டாடும் நட்சத்திரத் தம்பதிகளுக்கு முன்கூட்டியே வாழ்த்துகள் சொல்லிவிடுகிறோம். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன் திருமணம் செய்து கொண்டவர்கள் பட்டியல் :

நவம்பர் 2ம் தேதி – இசையமைப்பாளர் அரோல் கரொலி – ரம்யா. அடுத்து இயக்குனர் அருண்குமார் – ரம்யா.

நவம்பர் 12ம் தேதி நடிகை சரயு மோகன்- உதவி இயக்குனர் சனால் வி.தேவன்.

நவம்பர் 25ம் தேதி திலீப் – காவ்யா மாதவன். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 1ம் தேதி – பாண்டு மகன் பிண்டு.

இந்தாண்டு தலைதீபாவளி பண்டிகைக்கு முன் திருமணம் செய்து கொண்டவர்கள் பட்டியல் :

பிப்ரவரி 6ம் தேதி – நடிகை சாதனா டைட்ஸ்-தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கார்த்திக்.

பிப்ரவரி 10ம் தேதி – நடிகை மனீஷா யாதவ் – தொழிலதிபர் வார்னிட்டி.

மே 6ம் தேதி – ‘காதல் கண் கட்டுதே‘ ஹீரோ கேஜி – சாஃப்ட்வேர் என்ஜினீயர் நந்தினி சீனிவாசன்.

ஜூலை 14ம் தேதி – ‘மத்திய சென்னை’ ஹீரோயின் ரம்யாபர்ணா-பஹா அலிகான்.

ஆகஸ்ட் 18ம் தேதி – ‘தாஜ்மஹால்’, ‘குட்லக்’ படங்களின் ஹீரோயின் ரியாசென் – தொழிலதிபர் ஷிவம் திவாரி.

ஆகஸ்ட் 20ம் தேதி – ‘இலை’ ஹீரோயின் சுவாதி நாராயணன் – யாஷின்.

ஆகஸ்ட் 23ம் தேதி – பிரியாமணி – மும்பை தொழிலதிபர் முஸ்தபா ராஜ்.

செப்டம்பர் 4ம் தேதி – நடிகரும், இயக்குனருமான திருமுருகன் மோகனப்பிரியா.

செப்டம்பர் 15ம் தேதி – இசையமைப்பாளர் தரண்குமார் – நடிகை மற்றும் மாடல் அழகி தீக்ஷிதா மாணிக்கம்.

அக்டோபர் 6 மற்றும் 7ம் தேதி – நடிகை சமந்தா-நடிகர் நாகசைதன்யா.

இவர்கள் அனைவரும் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

இந்தப் பட்டியலில் நடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் இணைய மாட்டார்கள். காரணம், அவர்கள் திருமணம் வரும் 26ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon