Primary Menu

Top Menu

September 26, 18

தட்டி தூக்கிய நடிகர் சிம்பு… பாஜகவை ‘மெர்சலாக்கிய’ முத்தான வரிகள் இதுதாங்க !!

தட்றோம், தூக்றோம்’ என்ற பணமதிப்பிழப்பு தொடர்பான பாடலில் நடிகர்கள், ரஜினியும், கமலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கபிலன் வைரமுத்து எழுதி, பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்து சிம்பு பாடிய, ‘தட்றோம், தூக்றோம்’ என்ற பணமதிப்பிழப்பு தொடர்பான பாடல் சில தினங்கள் முன்பு வெளியானது.

அந்த பாடலில் பண மதிப்பு நீக்கத்தால் நாட்டு மக்கள் சந்தித்த பிரச்னைகளை நகைப்புடன் விவரிக்கும் வகையில் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. ‘கோட் போட்டவங்க சங்க பிடிங்க அதைவிட்டு சாமானியர்கள் பணத்தை செல்லாது என அறிவிக்காதீர்கள்’ என்பது போன்ற வரிகள் அதில் வருகின்றன. இந்த நிலையில், அந்த வீடியோ காட்சியில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நடிகர் ரஜினி வரவேற்ற டிவிட்டர் ஸ்க்ரீன் ஷாட் போடப்பட்டுள்ளது. கமல் வரவேற்ற டிவிட்டும் அதில் காட்டப்படுகிறது.

ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தவறுதலாக வரவேற்றுவிட்டாத கூறிய கமல், சில நாட்களுக்கு முன்பு, அதற்கு தனது மன்னிப்பை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பணமதிப்பிழப்பு குறித்து நடிகர் சிம்பு பாடிய பாடலால் கோபமடைந்துள்ள பாஜகவினர் அவரது வீட்டை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon