Primary Menu

Top Menu

July 17, 18

ஜெயலலிதா அம்மா சந்தித்த முதல் நம்பிக்கை துரோகம் !!

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 13 வயதில் அவர் சந்தித்த முதல் நம்பிக்கை துரோகம். அவர் பல நாட்கள் தனிமையில் அழ காரணமானது.

அப்போது அவரது வீடு தி.நகர், சிவஞானம் தெருவில் இருந்தது. அவர் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளி இருந்த, இவரைவிட இரண்டு வயது மூத்த பெண் ஒருவர் தோழியாகிறார். அதுவரை அவருக்குப் பெரிதாக தோழிகள் என்று யாருமில்லை. இந்த நட்பு, உண்மையில் மனமகிழ்ச்சியைத் தருகிறது. சந்தோஷமாக தன் சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறார். ஆனால், அந்தப் பெண் தன்னுடன் நட்பானதற்கு வேறொரு காரணம் இருக்கிறது என்பது, சில நாட்கள் கழித்துத்தான் தெரிகிறது.

ஆம், அந்தப் பெண் ஜெயலலிதா வீட்டின் அருகே இருந்த ஒரு ஜெயின் பையனை நேசித்தார். அம்மா வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால்தான், அந்தப் பையன் வீடு தெரியும். அதனால், தினமும் அந்தப் பெண் அம்மா வீட்டுக்கு வந்து, மொட்டை மாடியிலிருந்து நின்றுகொண்டு அந்தப் பையனிடம் சைகையில் பேசுவார். இதைச் சில நாட்கள் கழித்துத்தான் அம்மா கண்டுபிடித்தார். இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் அம்மா கேட்க, இதை அவரும் ஒப்புக்கொண்டார்.

“நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். எனக்காக அந்தப் பையனிடம், தூது செல்ல முடியுமா? தான் வராத நாட்களில், அந்தப் பையனிடம் தான் வராத காரணத்தை சைகையில் சொல்ல முடியுமா?” என்று அந்தப் பெண், அம்மாவிடம் தங்கள் காதலுக்கு உதவி கேட்கிறார்.

உண்மையில், இது அம்மாவுக்குச் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. தன்னைவிட இரண்டு வயது மூத்த பெண் தன்னிடம் உதவி கேட்பதே, அவருக்குச் சிலிர்ப்பூட்டுகிறது. இதன் விளைவுகள் எதனையும் யோசிக்காமல், அந்தப் பதின்பருவ காதலுக்குத் தூது செல்ல அம்மா சம்மதம் தெரிவிக்கிறார். சொல்லப்போனால், அந்த வயதில் அவர் தெரிவித்த இந்தச் சம்மதம்தான், துரோகச் சூழ் இவ்வுலகு குறித்து அவருக்கொரு புரிதல் உண்டாகக் காரணமாக அமைகிறது.

அந்தத் தோழி, சில நாட்கள் அம்மா வீட்டுக்கு வரவில்லை. தான் வராத காரணத்தை அந்தப் பையனிடம் தெரிவித்துவிடும்படி அம்மாவிடம் சொல்கிறார். அம்மாவும் இதை அந்தப் பையனிடம் மொட்டை மாடியில் நின்று சைகையில் தெரிவிக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டமாக இதை அம்மா வீட்டுக்கு வரும் பால்காரர் பார்த்துவிடுகிறார்.

இந்த விஷயத்தை சந்தியாவிடம் சொல்லி இருந்தால்கூட, அம்மு உண்மையைச் சொல்லிச் சமாளித்து இருப்பார். ஆனால் பால்காரர், அம்முவின் தோழி வீட்டுக்குச் சென்று, “இனி உங்கள் பெண்ணை அந்த நடிகை வீட்டுக்கு அனுப்பாதீர்கள். அம்மாவின் நடவடிக்கை சரியில்லை… அவர் மாடியில் நின்றுகொண்டு ஒரு பையனிடம் தினமும் சைகையில் பேசிக்கொண்டு இருக்கிறார்” என்று சொல்லிவிடுகிறார். அத்துடன் அந்தப் பெண் அம்மா வீட்டுக்கு வருவது நின்றுவிடுகிறது.

தோழி பல நாட்கள் வீட்டுக்கு வராததால்… அம்மா , அந்தத் தோழியின் வீட்டுக்குச் செல்கிறார். அந்தத் தோழியின் பெற்றோர், அந்த பால்காரர் சொன்னதை அப்படியே சொல்லி அம்மாவை சரமாரியாகத் திட்டிவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில், தோழி உண்மையைச் சொல்லித் தன்னைக் காப்பார் என்று அம்மா தன் தோழியையே பார்க்கிறார். ஆனால், அந்தத் தோழி அம்மாவின் பார்வையைச் சந்திக்கத் திராணியின்றி அமைதியாகத் தலைகுனிந்து நிற்கிறார்.

வசைச் சொற்கள் தன்னை வந்து தாக்கிய அந்தச் சமயத்திலும்கூட அம்மா, தன் தோழியைக் காட்டிக் கொடுக்கவில்லை. அவர் செய்தது வீட்டுக்குச் சென்று, தனிமையில் வெகுநேரம் அழுதது மட்டும்தான். நம்பிக்கை துரோகம் என்ற பதத்துக்கான அர்த்தத்தை, முதன்முதலாக அம்மா உணர்ந்தது அப்போதுதான். ‘‘துரோகம் இவ்வளவு வலியைத் தருமா? என்று வெகுநாட்கள் இதை நினைத்து அழுதிருக்கிறேன்’’ என்று இந்தச் சம்பவத்தைப் பின்னாளில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் அம்மா.

மனைவியிடம் கோபிக்காதீர்கள்!

நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு...

Leave a Reply