Primary Menu

Top Menu

September 22, 18

சோமாலியாவில் இரட்டை குண்டு வெடிப்பு ; பலி எண்ணிக்கை 260 ஆனது !!

ஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில் பிரபல விடுதிக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260 -ஆக அதிகரித்துள்ளது. இந்தக் குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், நேற்று முன்தினம் இரவு, ஒரு டிரக் புகுந்தது.அதிலிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், அங்கிருந்த ஒரு ஓட்டல்கள், சந்தைகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் ஒரே நொடியில் இடிந்து விழுந்தன. மேலும் குண்டு வெடிப்பினால்,அங்கிருந்த கடைகளிலும் தீப்பற்றியது. அந்தப் பகுதியில், சிறிது நேரத்தில் மற்றொரு குண்டும் வெடித்தது.

அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு தான் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இது பற்றி பேசிய சோமாலிய அதிபர் முகமது அப்துல்லாஹி பெர்மஜோ, தீவிரவாதிகள் கொடூர திட்டங்களை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இரக்கமில்லா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். மேலும் வெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அதிபர் முகம்மது அப்துல்லாஹி பெர்மஜோ அறிவித்துள்ளார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon