Primary Menu

Top Menu

September 22, 18

செல்வ மகள் சேமிப்பு திட்டம் : ஏமாற்றும் மத்திய அரசு !!

2015ம் ஆண்டில் சுகன்யா சம்ரிதி திட்டம் அதாவது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம்.

பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. மேலும் செலுத்தும் தொகைக்கு வட்டியாக தொடக்க காலத்தில் 9.1 சதவீத வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொருளாதார மந்த நிலை இந்த திட்டத்திலும் எதிரொலித்துள்ளது.

வட்டி விகிதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 8.4 சதவீத வட்டி மட்டுமே அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, ஓராண்டு முடிவில் சேமிப்பு கட்டணம் ரூ. 65 ஆயிரத்திற்கு ரூ. 800 மட்டுமே வட்டியாக கிடைத்துள்ளது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட  திட்டம்  தற்போது வட்டியை அரசு குறைத்திருக்கிறது. அரசின் எல்லா அறிவிப்புகளுமே இது போன்றதாகத் தான் இருக்குமோ என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

Comments

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon