Primary Menu

Top Menu

September 26, 18

சுட்டுக் கொன்றதாக கூறப்பட்ட முன்னாள் காதலிக்கு அதிகாரமிக்க பதவி கொடுத்த வட கொரிய அதிபர் !!

வடகொரியாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் ஹயோன் சாங் வோல் . இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பாலியல் வீடியோ ஒன்றை தயார் செய்தார் என்ற குற்றத்திற்காக ஹையோனை சுட்டுக்கொல்ல கிம் ஜாங் உன் ஆணையிட்டு, அது நிறைவேற்றப்பட்டதாக ஒரு செய்தி இணையத்தில் அப்போது வலம் வந்தது.

வட கொரியா என்பது ஒரு இரும்புத்திரை போட்ட நாடு என்பதால் அங்கு நடைபெறும் நிகழ்வுகள் வெளி உலகிற்கு முழுமையாக தெரிவதில்லை. எனவே வதந்திகள் றெக்கை கட்டி பறப்பது வழக்கம்.

ஆனால் ஓராண்டு கடந்த நிலையில் அவர் தேசிய தொலைக்கட்சியில் தோன்றி, ஜனாதிபதி கிம் ஜோங் வுன் கலைத்துறைக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்து பேசி அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். இந்நிலையில்  தற்போது ஆளும் கொரியா தொழிலாளர்கள் கட்சியில் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் அதிகாரம் படைத்த பதவியை பாடகி ஹயோன் சாங் வோல் பெற்றுள்ளார். பாடகி ஹயோன் சாங் வோல் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கிம் ஜோங் உடன் நெருக்கமாக பழகியுள்ளார்.

இவர்களது காதல் கிம் தந்தைக்கு தெரிய வர, அந்த உறவு முடிவுக்கு வந்தது. இருப்பினும் வடகொரியாவின் பெண்கள் இசைக்குழுவில் முன்னணி பாடகியாக வலம் வந்த  பிரபலமான பல பாடல்களை பாடியுள்ளார். இதனிடையே வடகொரிய ராணுவ அதிகாரி ஒருவரை மணந்து கொண்ட ஹயோன் சாங் வோல் ஒரு குழந்தைக்கு தாயாரானார்.

அமெரிக்காவுக்கு எதிராக போர் பதற்றம் நிலவும் சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது முன்னாள் காதலிக்கு, ஆளும் கட்சியில், முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம்மிக்க பதவியை கிம் ஜாங் உன் வழங்கியுள்ளது என்றும் அதேபோல் ஆளும் கட்சியில் தனது சகோதரிக்கும் முக்கிய பதவியை கிம் ஜாங் உன் வழங்கியுள்ளார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon