Primary Menu

Top Menu

September 26, 18

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் : 12 பேர் பலி !!

சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும், அமெரிக்காவும் சிரியா நாட்டினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் புலம் பெயர்ந்த மக்களில் 12 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 12க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர். இந்த தகவலை இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon