Primary Menu

Top Menu

October 16, 18

சர்கார் டீசர் ரிலிஸ் தகவல் இதோ !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், சர்கார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி உள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்மையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் கலாநிதிமாறன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் போது தளபதி விஜய் படக்குழுவினர் அனைவரையும் புகழ்ந்து பேசியதோடு, இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்துக்களையும் பதிவு செய்தார்.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. வரும் ஆயுத பூஜையன்று இப்படத்தின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon