Primary Menu

Top Menu

July 20, 18

சதாம் ஹுசைன் உயிருடன் இருந்திருந்தால் ! நினைவுநாள் சிறப்பு பகிர்வு

ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9, 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் சதாம் ஈராக்கின் அதிபராக இருந்தார்.

சதாம் ஹுசைன் இன்னும் கொஞ்ச வருடங்கள் வாழ்ந்திருந்தால் ஈராக்கில் குழப்பங்கள், உள்நாட்டு போர், குண்டுவெடிப்புகள், இஸ்லாமிய தேச ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டிருக்காது.

 

– டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்

 

ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9, 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் சதாம் ஈராக்கின்
அதிபராக இருந்தார்.

24 வருடங்கள் தனது தேசத்தின் வளர்ச்சிக்காக சதாம் உழைத்தாலும் தனது சர்வாதிகாரத்தால் மக்களை நிர்வாகப்படுத்தினார். ஏனெனில் ஈராக்கை பொறுத்த வரைக்கும் சன்னி,சியா,குர்து,போரா, நஸரா என பல்வேறு இனக்குழுக்கள் வாழ்கின்றன. இவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்குள்ளும் அமைப்புகள். இந்த குழுக்களை தனது சர்வாதிகார நிர்வாகத்தால் ஈராக்கியர்களாக மாற்றிய பெருமை சதாமுக்கே சேரும் என்பதை உலகநாடுகள் மறுக்காது.

முன்னதாக தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.

ஈரான் – ஈராக் போர் (1980–1988) மற்றும் குவைத் போர் (1991) நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார்.

இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது.

சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது. மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.

இதேவேளையில் ஈராக்கில் உலகை அழிக்கக்கூடிய பேரழிவு ஆயுதங்கள் இருக்கிறது என கூறிய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.

 

ஒருவேளை சதாம் ஹுசைன் வாழ்ந்திருந்தால்

 

* ஈராக்கில் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதம் உருவாக வாய்ப்புகள் இருந்திருக்காது.

* குர்தூ இனப் பெண்கள் பாலியல் அடிமைகளாக துன்புறுத்தப்பட்டிருக்க
மாட்டார்கள்.

* கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டிருக்க
மாட்டார்கள்.

* அவர்களது நிலம் அபகரிக்கப்பட்டிருக்க
மாட்டாது.

* வரலாற்று சின்னங்கள் அழிக்கப்பட்டிருக்கமாட்டாது.

* சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடியிருக்கும்.

* செய்தி சேகரிக்க சென்ற பத்திரக்கையாளர்களின் உயிர் காக்கப்பட்டிருக்கும்

* ஈராக் ஒரு ஆபத்தான நாடு என்ற பெயர் உலக அரங்கில் வந்திருக்காது.

குறிப்பாக ஈராக்கில் வாழும் இந்தியர்கள் வேலை இழந்து தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பியிருக்கமாட்டார்கள்.

 

சதாம் சர்வாதிகாரியாக இருந்தாலும் தன் நாட்டுக்கு அவர் செய்த நன்மைகளை விளக்கும் வீடியோ

 

லட்சுமி கடாட்சம் கிடைக்க வழி

கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது...

Leave a Reply