Primary Menu

Top Menu

September 26, 18

கேரளா தம்பதிக்கு ஹெல்மெட் அணிய அறிவுறுத்திய சச்சின் – சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ !!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி வரும் நவம்பர் 17ல் கொச்சியில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான கிரிக்கெட் வீரர் தான் சச்சின் டெண்டுல்கர் திருவனந்தபுரம் சென்றார். அங்கு அவர் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து கேரள அணிக்கு ஆதரவு கோரினார். பின்னர் சச்சின் மும்பை புறப்பட்டார். காரில் விமான நிலையம் செல்லும் வழியில் அவரை பார்த்து ஆச்சரியமடைந்த ஒரு ரசிகர் அவரது கார் அருகே பைக்கை செலுத்தினார். டெண்டுல்கர் காரின் கண்ணாடியை கீழே இறக்கி, பைக்கில் வந்தவரிடம், பின்னால் வருபவரிடம் பேச வேண்டியுள்ளது.
நீங்கள் சற்று முன்னால் செல்லுங்கள் என்று கூறினார்.

பின்னால் ஒரு பைக்கில் கணவன், மனைவி வந்து கொண்டிருந்தனர். அவர்களின் பைக்கை மெதுவாக செல்ல கூறிய டெண்டுல்கர் பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணியவேண்டும். ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்னால் இருப்பவருக்கும் விபத்தில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் எனவே நீங்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என பின்னால் இருந்த பெண்ணிடம் கூறினார். அந்த பெண்ணும் ஓகே என்று கூறினார்.

இந்த வீடியோவை சச்சின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon