Primary Menu

Top Menu

September 22, 18

கூகுள் தேஜ் என்ற பேமெண்ட் செயலி அறிமுகம் !!

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யூபிஐ அடிப்படையில் கூகுள் தேஜ் என்ற பேமெண்ட் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேஜ் என்றால் இந்தியில் ஃபாஸ்ட் என்று கூறப்படுகிறது.

இந்த தேஜ் செயலி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் மிக எளிமையாக பயன்படுத்த முடியும். மேலும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மிக எளிமையாக பணம் அனுப்பவும் முடியும்.

இந்த தேஜ் ஆப்-ஐ ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். மேலும் Google Play ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும். கூகுள் தேஜ் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்த பின்னர் மொழியை தேர்வு செய்ய வேண்டும். இதில் தமிழ் உட்பட எட்டு இந்திய மொழிகள் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளது.

அடுத்து வங்கியில் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணை இந்த தேஜ் செயலியில் பயன்படுத்த வேண்டும். பின்பு இந்த தேஜ் செயலியில் நீங்கள் விரும்பிய பின் நம்பர், ஸ்கீரின் லாக் போன்றவற்றை பயன்படுத்த முடியும். யுபிஐ உதவியுடன் வங்கி கணக்கை இந்த தேஜ் செயலியில் இணைக்க வேண்டும், உங்கள் வங்கி கணக்குடன் இணைந்து தேஜ் செயலி இயங்குவதால் பாதுகாப்பான பரிவர்த்தனை அளிக்கப்படும்.

இந்த செயலியில் “கேஷ் மோட்” என்ற வசதியைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் எண் போன்ற எந்த ஒரு தனிநபர் விவரங்களையும் பகிராமல் அருகில் உள்ள நபர்களுக்குப் பணம் அனுப்ப முடியும். மேலும் இந்த செயலியில் ஸ்காட்ச் கார்டு வழியாகச் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1,000 ரூபாய் வரை பணத்தினை வெல்ல முடியும். இதில் ஞயிற்றுக்கிழமைகள் என்றால் 1 லட்சம் ரூபாய் வரை வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.

மேலும் இந்தியாவில் உள்ள 55 வங்கிகள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். எனவே அனைத்து இடங்களிலும் மிக எளிமையாக பயன்படும் வகையாக இந்த தேஜ் செயலி அமைந்துள்ளது.

Comments

விரைவில் நோக்கியா கேமிங் போன் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பல்வேறு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon