Primary Menu

Top Menu

September 23, 18

ஓக்கி புயலில் மாயமான மீனவர்களின் உடல்கள் கடலில் மிதப்பு : மீனவர்கள் அதிர்ச்சி !!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி ஓக்கி புயல் தாக்கியதில், லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தும், மழை வெள்ளத்தில் சிக்கியும் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் குறித்த முன்னரிவிப்பு எச்சரிக்கை அரசு கொடுக்கப்படாததால், குமரி கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமாகினர். அதிலும் சிலர் மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் போன்ற பகுதிகளில் கரை ஒதுங்கினர்.

மேலும் குஜராத் மாநிலம் வராவில் துறைமுகத்தில் இருந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்த மீனவர்கள் அனைவரும் தமிழக அரசு அளித்த 1000 லிட்டர் டீசலுடன் படகுகளில் தமிழகத்திற்கு புறப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து புயலால் மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையுடன் இணைந்து குமரி மீனவர்களும் ஈடுபட்டு வந்தனர்.

விசைப்படகுகள் மூலம் காணாமல் போன மீனவர்களை தேடி குமரி மீனவர்கள் சென்றனர். இந்நிலையில் குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகே கடலில் மீனவர்கள் உடல்கள் மிதக்கின்றன என்று கரைக்கு திரும்பிய மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர். மேலும் ஓக்கி புயலில் சிக்கி மீனவர்கள் பலர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளதாகவும், 8 நாள் ஆகி விட்டதால் உடல்கள் மிதப்பதாகவும் கூறியுள்ளனர். காணாமல் போனவர்களை தேடிச்சென்ற மீனவர்கள் உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதால் கரை சேர்க்க முடியவில்லை என்ற தகவலும் அளித்துள்ளனர். கடலில் மாயமானவர்கள் குறித்து தெரியாததால் மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.

மாயமான மீனவர்களை விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடந்து வருகிறது. கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் கடற்படையுடன் எங்களையும் அழைத்துச் செல்ல வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, தேடுதல் வேட்டையில் உள்ளூர் மீனவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon