Primary Menu

Top Menu

September 25, 18

எங்களுக்கு கட்டளையிட விஷால் யார் ? – அபிராமி ராம்நாதன் கண்டனம்

தியேட்டர் உரிமையாளர்களுக்கு கட்டளையிட விஷால் யார் ?-அபிராமி ராம்நாதன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது :

திரையரங்க டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும், கேளிக்கை வரி குறைப்புக்கும் தமிழக அரசுக்கு நன்றி. திரையரங்க உரிமையாளர்களுடன் விஷால் கலந்தாலோசிக்க வேண்டும். எங்களிடம் கலந்தாலோசிக்காமல் விஷால் எடுத்த முடிவு வருத்தமளிக்கிறது . தியேட்டர்களில் அம்மா குடிநீர் பாட்டில்களை விற்கத் தயாராக உள்ளோம்.
இணையதளத்தில் முன்பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விஷால் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளது சரியில்லை.சினிமா டிக்கெட் கட்டணம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களுக்கு கட்டளையிட விஷால் யார் ? யார் யாருக்கும் முதலாளி கிடையாது. மக்கள் பாதிக்காத வகையில் திரையரங்குகளில் தின்பண்டங்கள் விற்கப்படும். தியேட்டர்கள் குறித்த நெறி முறை அறிவிப்பு மனவருத்தை அளிக்கிறது.
Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon