Primary Menu

Top Menu

September 22, 18

உள்நாட்டு கோதுமை உற்பத்தியை பாதுகாக்க நடவடிக்கை

இந்தியாவில் இறக்குமதி கோதுமைக்கான சுங்க வரி 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு கோதுமை உற்பத்தியை பாதுகாக்கும் வகையில் இறக்குமதி கோதுமைக்கான 20 சதவீத சுங்க வரியை 30 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. வால்நெட் கொட்டைகள் இறக்குமதிக்கான சுங்க வரி 30 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையிலிருந்து குறைவான விலைக்கு இறக்குமதி செய்கையில் உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பு உருவாகும். இதனால் உள்நாட்டு கோதுமை விலையைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டு ஜூன்- ஜூலை கோதுமை பருவத்தில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ரூ. 1,735 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமையால் உள்நாட்டு கோதுமை சந்தையில் ஏற்படும் விலை சரிவினை கட்டுப்படுத்த அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Comments

அமேசான் வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 6டி டீசர் பதிவு

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon