Primary Menu

Top Menu

September 23, 18

உண்மையிலேயே விஷால் “புரட்சித்தளபதி” தாங்க !!!

உதவி இயக்குனராக சினிமாவில் வேலைசெய்து நடிகராக வலம் வந்து தற்போது நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பு வகிக்கும் விஷால், புரட்சிகரமான காரியங்களை செய்பவர் என்பது நமக்கு தெரியும்.

திருட்டு விசிடி ஒழிப்பில் ஈடுபட்டு தன் தைரியத்தை காட்டிய விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்ட திருப்புமுனையாக இருந்தார்.

தற்போது தியேட்டர்களில் நடக்கும் கொள்ளையை தடுக்க தடுப்பு சுவரை எழுப்பியிருக்கிறார். அதாவது, இனிமேல் தியேட்டர்களில் அம்மா குடிநீர் பாட்டில்தான் விற்கணும். அதுவும் அதே விலையில்.

அதுமட்டுமல்ல… அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் ரேட்டான 20 ரூபாய், 50 ரூபாய், 70 ரூபாயை தாண்டி யாரும் டிக்கெட் விற்கக்கூடாது.

குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் இருப்பது போல பார்க்கிங் கட்டணத்தை அறவே ஒழிக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாத தியேட்டர்கள் மீது மக்கள் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று அறிவித்திருக்கிறார்.

உண்மையிலேயே விஷால் “புரட்சித்தளபதி” தாங்க !!!

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon