Primary Menu

Top Menu

September 25, 18

இந்தியாவின் டாப் 5 தொழில் முனைவு ஹீரோக்கள் !

இந்தியாவில் பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றவேளையில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து, அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது.
நமது நாட்டில் தொழில்முனைவோற்கான சூழலும் சாதகமாகவே உள்ளதால் பல இளைஞர்கள் தங்களின் தொழில் கனவுகளை நிறைவேற்ற மிகுந்த தன்னம்பிக்கையுடன் தொடங்குகின்றனர்.

இதனடிப்படையில் ஸ்டார்ட் அப் துறையை வடிவமைத்த டாப் 5 தொழில் முனைவு ஹீரோக்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

1. பன்சல் சகோதரர்கள்

FLIPKART- ஐ சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் ஆகியோர் 2008-ஆம் ஆண்டில் பெங்களூரில் தொடங்கினார்கள். 4 இலட்சம் ரூபாய் மற்றும் இரண்டு கணினியுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இப்போது $17 பில்லியன் டாலர் மதிப்புள்ள நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

மேலும் MYNTRA, WE READ, CHAKPAK.COM மற்றும் MIME 360 ஆகிய நிறுவனங்களை FLIPKART வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. தீபிந்தர் கோயல்

இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது – என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உணவு பிரியர்களுக்கு கொண்டாட்டமாக உணவு விடுதிகளில் ஒன்று தான் ZOMATO. உணவகம் தேடல், ஆன்லைன் மூலம் உணவை பதிவு செய்தல், ஹோட்டல் டேபிள் ரிசர்வேஷன் மற்றும் மேலாண்மை நிறுவனமான ZOMATO வை தீபிந்தர் கோயல் என்பவர், பன்கஜ் சட்டா என்பவருடன் சேர்ந்து தொடங்கினார். 2005 ல் IIT டெல்லியில் படிப்பை முடித்த இவர், பின்னர் BAIN & CO நிறுவனத்தில் பணிபுரிந்தார். இதன் கேண்டினில் மெனுவை பார்த்து மதிய உணவை ஆர்டர் செய்ய நீண்ட வரிசையில் நிற்கவேண்டியது இருந்தது. இந்த நேர விரயத்தை குறைக்க 2008 ல் தீபிந்தர் கோயல் மெனுவை ஸ்கேன் செய்து இணையத்தளத்தில் பதிவேற்றினர். இதற்கு FOODIEBAY என்று பெயர் வைத்தனர்.

இந்த தளத்திற்கு பார்வையாளர்கள் அதிகரிக்கவே, உணவகங்களையும் பட்டியலிட்டனர். 2010 ல் ZOMATO என்று பெயர் மாற்றினர். இது பிரபலமடையவே தங்கள் வேலையை விட்டு ZOMATO நிறுவனத்திற்காக தங்களை அர்ப்பணித்தனர். இப்போது 23 நாடுகளில் இந்நிறுவனம் இயங்குகிறது.

3. கவின் பார்தி மிட்டல்

மெசேஜ் அப்ளிகேசன் HIKE ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கவின் பார்தி மிட்டல், மிகப்பெரிய தொழிலதிபரான பார்தி மிட்டலின் மகன். 2012 ல் தொடங்கப்பட்ட HIKE MESSENGER, ஒரு சில மாதங்களில் BHARTI SOFTBANKயிடமிருந்து $7 டாலர் முதலீட்டை பெற்றது. WHATSAPP, WE CHAT, VIBER மற்றும் TELEGRAM போன்றவற்றுடன் HIKE போட்டியிட்டு வருகிறது. தமிழ் பயன்பாட்டாளர்களின் பிரத்யேக தளம் HIKE என்பதை நாம் மறுக்க முடியாது.

4. குயிக்கர் பிரனே சௌலட்

தனது கல்வியை டெல்லி IIT, கல்கத்தா IIM முடித்த பின்னர், PROCTER & GAMBLE, MITCHELL MADISON GROUP, WALKER DIGITAL PRICEWATERHOUSE COOPERS AND BOOZ ALLEN HAMILTON ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தார். பிரனே சௌலெட் கடந்த 2007ம் ஆண்டில் EXCELLERE என்ற தனது முதல் நிறுவனத்தை தொடங்கி, பின்பு 2008ல் ஜபி தாமஸ் என்பவருடன் சேர்ந்து KIJIJI INDIA என்கிற நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் QUIKR ஆக பிராண்ட் மாற்றம் செய்யப்பட்டது.

5. பேடிஎம் ஷர்மா

விஜய் சேகர் ஷர்மா தனது பொறியியல் படிப்பை டெல்லி இன்ஜினியரிங் கல்லூரியில் முடித்தாலும் ஆங்கில மொழியில் பேசமுடியாமல் ஆரம்ப நாட்களில் மிகுந்த சிரமத்தை சந்தித்துகொண்டிருந்தார்.

இருப்பினும் தனது முயற்சியால் 1997ம் ஆண்டில் INDIA SITE. NET என்கிற இணையதளத்தை தொடங்கி, இரண்டு வருடம் கழித்து 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றார். கடந்த 2005ல் ONE 97 COMMUNICATIONS நிறுவனத்தை தொடங்கி, செய்தி, கிரிக்கெட் ஸ்கோர், ரிங்டோன், ஜோக் மற்றும் தேர்வு முடிவுகளை வழங்கியது.

பிறகு 2010ல் PAYTM நிறுவனத்தை தொடங்கி, இது ONLINE RECHARGE, BILL PAYMENT, E-COMMERCE, BUS TICKETS, MOVIE TICKETS BOOKING சேவைகளை வழங்கி வருகிறது. இவர்களை போல ராகுல் யாதவ், குணால் ஷா,நவீன் திவாரி,பவீஷ் அகர்வால், குணால், ரோஹித் போன்ற இளம் தொழில்முனைவோர்களை பற்றியும் அவர்களது வணிக திறமைகள் பற்றியும் அடுத்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

Comments

கடவுளின் முட்டாள்தனம்!!

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon