Primary Menu

Top Menu

September 20, 18

இது தான் "மெர்சல்" கதையா ?

தற்போது விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் “மெர்சல்” படம் வரும் 18 – ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3350 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அட்லீ முன் இயக்கிய “ராஜா ராணி“, “தெறி” படம், மணிரத்னம் முன் இயக்கத்தில் வெளிவந்த “மௌன ராகம்” படம் மற்றும் கே. சுபாஷ் இயக்கிய “சத்ரியன்” படத்தின் தழுவல் என்றும் பலரும் விமர்சனம் செய்தியிருந்தார்கள்.

இதனிடையில் “மெர்சல்” படம் கூட கமல்ஹாசன் நடித்து வெளிவந்த “அபூர்வ சகோதர்கள்” படத்தின் தழுவல் என்றும் கூட தகவல் வெளியானது. ஆனாலும் அப்படிப்பட்ட வதந்திகளை அட்லீ மறுத்து விட்டார்.

இப்பொழுது “மெர்சல்” படத்தின் கதை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதை பிரிட்டிஷ் திரைப்பட சென்சார் குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். மேஜிக் நிபுணர் ஒருவரும், டாக்டர் ஒருவரும் சேர்ந்து இந்தியாவில் நடக்கும் மருத்துவ உலக குற்றங்களை பற்றி கண்டு பிடித்து வெளியிடுகிறார்கள். இவர்களின் அப்பா வில்லன்கள் கொன்றுவிடுகிறார் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் அப்பா, மேஜிக் நிபுணர் மற்றும் டாக்டர் என மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருப்பது இதன் மூலம் தெரிகிறது.

இந்த படத்தில் வன்முறை காட்சிகளும் மற்றும் வசனங்களும் இடம் பெற்றியிருப்பதாகவும். மேலும் படத்திற்கு “12 ஏ” சான்றிதழை பிரிட்டிஷ் திரைப்பட சென்சார் குழு வழங்கியுள்ளது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon