Primary Menu

Top Menu

September 20, 18

ஆதவ் திருமணத்திற்கு மாப்பிள்ளை போன்று வந்த ஸ்ருதிஹாசன் காதலர் !!

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவுக்கும், வினோதினிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசனும் தனது மகள் ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டார்.

இதில் ஆதவ் கண்ணதாசன் திருமண நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலர் மைக்கேல் கோர்சேலையும் வந்திருந்தார்.

லண்டனை சேர்ந்த நாடக நடிகரான மைக்கேல் தமிழர் கலாச்சாரப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து மாப்பிள்ளை மாதிரி திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பின்பு ஜோடியாக ஒரு சோபாவில் அமர்ந்திருந்தனர். அதற்கு பக்கத்து சோபாவில் நடிகர் கமல்ஹாசனும் அமர்ந்திருந்தார்.

ஸ்ருதியும், மைக்கேலும் காதலிப்பதாக கூறப்படும் இந்நிலையில் அவர்கள் ஜோடியாக திருமணத்திற்கு வந்து, மேலும் கை கோர்த்து புகைப்படங்களுக்கு போஸும் கொடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் அடுத்தாண்டு நடக்கக்கூடும் என்றும், மேலும் மைக்கேல், ஸ்ருதி காதலை கமலும், சரிகாவும் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon